கனேடிய (Canada) தொழிலாளர்களுக்கு கனடா தொழிலாளர் நலத்திட்டத்திலிருந்து (CWB) அதிக ஊதியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி (11.07.2025) முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவியை வழங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி உதவி
இதனடிப்படையில், தனியாக வாழ்பவர்கள் 1,633 டொலர்கள் வரையிலும் குடும்பங்கள் 2,813 டொலர்கள் வரையிலுமான நிதி உதவியை பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, அவர்கள் ஊனமுற்றோர் துணைத் தொகைக்குத் தகுதி பெற்றால் கூடுதலாக 843 டொலர்களை பெறலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த கொடுப்பனவுக்கு தகுதி பெற ஆண்டு முழுவதும் கனடாவில் வசிக்க வேண்டும் என்பதோடு 19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
பெறும் தொகை
பெறும் தொகை வருமானத்தைப் பொறுத்தது என்பதோடு அதிகமாக சம்பாதித்தால், கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 இல் ஏற்கனவே பணம் பெற்றிருந்தால் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் வரிகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்து சரியான படிவங்களை நிரப்ப வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
ஜூலை 11, ஒக்டோபர் 10 மற்றும் ஜனவரி ஒன்பது என வருடத்தில் கொடுப்பனவுகள் மூன்று பகுதிகளாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவு கிடைக்கவில்லை என்றால், தகுதி பெறுகிறீர்களா என்பதைச் சரிபார்த்து கொடுப்பனவு திகதிக்குப் பிறகு சுமார் பத்து வணிக நாட்கள் காத்திருக்க வேண்டும் எனவும் பிரச்சினை தொடர்ந்தால் உதவிக்கு கனடா வருவாய் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
