Home உலகம் பெரும் காட்டுத்தீயால் பிரான்சில் பதற்றம்: 10 வான்கலங்களுடன் தீயணைப்பு நகர்வு!

பெரும் காட்டுத்தீயால் பிரான்சில் பதற்றம்: 10 வான்கலங்களுடன் தீயணைப்பு நகர்வு!

0

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் இன்று ஏற்பட்டகாட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவிவருவதால் பல்லாயிரக்கணக்கான கோடைவிடுமுறை சுற்றுலாப்பயணிகள் உட்பட்ட மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளளனர்.

பிரான்சின் தென்பகுதியில் உள்ள மார்சேய் நகரை நோக்கி இந்த காட்டுத்தீ பரவி வருதால் தற்போது மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது தீயை அணைக்கும் பணியில் ஏழு விமானங்களும் மூன்று உலங்குவானூர்திகளும் வான் வழியிலும் பல தீயணைப்பு இயந்திரங்கள் தரையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நகரவாசிகளுக்கு எச்சரிக்கை

மார்சேய் வான் பரப்பு தற்போது அடர்ந்த கரும்புகையால் மூடப்பட்டுள்ளன. நகரவாசிகளை தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு கோரியுள்ளனர்.அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்ற்பபட்டுள்ளனர்.

இந்த தீ, தற்போது மார்சேய் நகரின் 16வது வட்டாரத்தில் உள்ள பெலூக் பகுதியை பாதித்து வருகிறது.

தீப்பிழம்புகள் தற்போது போகேயன் நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானத்திலிருந்து தீக்கங்குகள் மற்றும் சாம்பல் விழுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஒரு நெடுஞ்சாலை பகுதியில் முதலில் ஏற்பட்ட தீ விபத்தே தற்போது மிகவிரைவாக பரவி வருவதாக குறிப்பிடபட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version