கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2024 ரி20 ஆடவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான மிகப்பெரிய பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.
அதன்படி, போட்டித் தொடரில் வெற்றிப் பெறும் அணிக்கு 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
அத்துடன், வெற்றியாளர்கள் குறைந்தபட்சம் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இரண்டாம் இடத்திற்கான பரிசு
இதேவேளை, போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேலும், அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா 787,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/highest-ever-prize-money-for-t20-world-cup-2024-1717463183
