Home இலங்கை சமூகம் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி…! வவுனியா, மன்னார் மக்களுக்கான அவசர அறிவிப்பு

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி…! வவுனியா, மன்னார் மக்களுக்கான அவசர அறிவிப்பு

0

Courtesy: சண்முகம் தவசீலன்

பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை
ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக
செல்லும் பறங்கி ஆறு. சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின்
நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய்,
தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு
ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக
இருக்கவும்.

கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து
பாதுகாப்பு பெறும் வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும்.

தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு

வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றிரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், குருவிச்சை ஆற்றுப்
பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவுகிறது.

எனவே பண்டாரவன்னி பகுதியில் வசிக்கும் மக்கள் நிலைமையை கவனமாகக் கண்காணிக்க
வேண்டும்.

வெள்ளம் அபாய மட்டத்திற்கு உயர்ந்தால்இ தயவுசெய்து உடனடியாக கருவேலன்கண்டல் பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயருங்கள் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது

NO COMMENTS

Exit mobile version