Home இலங்கை சமூகம் அதிவேக நெடுஞ்சாலைகளி்ல் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த புதிய திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளி்ல் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த புதிய திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

0

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் கொடுப்பனவு மேற்கொள்வதற்கான நடவடிக்கை தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும்.

பூர்த்தி செய்யப்படாத நடவடிக்கை

இன்று முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த மாதம் 11ஆம் திகதி கொட்டாவ மற்றும் கடவத்த சந்திப்புகளில், இதன் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version