Home சினிமா கடைசி உலகப்போர் படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடைசி உலகப்போர் படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கடைசி உலகப்போர்

தமிழ் சினிமாவில் தான் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்தை தானே இயக்கியவர் ஹிப்ஹாப் ஆதி. முதலில் இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக பிரபலமான இவர், அதன்பின் இசையமைப்பாளராக களமிறங்கினார்.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்து, தயாரித்து வெளிவந்துள்ள திரைப்படம் கடைசி உலகப்போர்.

இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளிவந்தது. இப்படத்தில் நட்டி நட்ராஜ், நாசர், அனகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ள நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 

அதன்படி, கடைசி உலகப்போர் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாள் ரூ. 50 லட்சம் வசூல் செய்திருந்த இப்படம் இரண்டாவது நாளில் ரூ. 1 கோடி வரை வசூல் செய்து, மொத்தமாக இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 1.5 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூலை குவிக்கப்போகிறது என்று. 

Source: https://cineulagam.com/article/hiphop-aadhi-kadaisi-ulaga-por-movie-box-office-1726979928

NO COMMENTS

Exit mobile version