Home ஏனையவை வாழ்க்கைமுறை நாட்டிலுள்ள இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய் நிலைமை: சுகாதார அமைச்சின் தகவல்

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய் நிலைமை: சுகாதார அமைச்சின் தகவல்

0

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில்,

கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

47 பேர் உயிரிழப்பு

இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில்

உயிரிழந்தனர்.

இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version