Home ஏனையவை வாழ்க்கைமுறை இளநரையால் அவதிப்படுகிறீர்களா..! இயற்கையாக வீட்டிலேயே தீர்வு இதோ

இளநரையால் அவதிப்படுகிறீர்களா..! இயற்கையாக வீட்டிலேயே தீர்வு இதோ

0

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் இளையோர் வரை அனைவரும் இளநரையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடுத்தர வயதுக்கு பிறகு வரக்கூடிய நரையை தவிர்க்க முடியாது. ஆனால் இளவயதில் வரக்கூடிய நரையை தடுக்க இயற்கையான வழிமுறைகள் உண்டு.

அனைவரது சமையலறையிலும் உள்ள மற்றும் சிறந்த மருத்துவ நலன்களை கொண்ட வெங்காயம் இதற்கான சிறந்த தீர்வாக காணப்படுகிறது.  

இளநரைக்கான காரணம்

மரபணு, ஊட்டச் சத்து குறைபாடு, சுற்றுப்புற சூழல், இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் இளநரைக்கு காரணமாக அமைந்துள்ளது. அத்துடன், வேலை அழுத்தம் அல்லது மன அழுத்தம் காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம்.

அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள்

தலையில் உள்ள செல்களில் மெலனின் சுரப்பு குறையும் போது வெள்ளை முடி வருகிறது. இந்த நிலையில், வெள்ளை முடி வருவதற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும். 

வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இளநரைக்கு இலவாக தீர்வு காணலாம். 

வெங்காயம்

வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம், சாம்பார் வெங்காயம் மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன. இது கல்சியம், விட்டமின் பி6, விட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. 

கோடையில் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றீர்களா! இதை முயற்சி செய்து பாருங்கள்…

முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து, முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.  

மனித உடல் இயற்கையாகவே ஹைட்ரஜன் பெரக்சைடு (Hydrogen Peroxide) எனும் மூலக்கூறுகளைச் சுரக்கும் தன்மை கொண்டது. இது அதிக அளவில் சுரக்கும் போது நரை முடி உருவாகும். இந்தச் சுரப்பை குறைத்து, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு வெங்காயச் சாற்றைத் தலையில் தடவ வேண்டும். 

இதற்கமைய, வெள்ளை முடியை கருமையாக்குவதற்கும் முடியை அடர்த்தியாக வளரச்செய்வதற்கும் வெங்காயச் சாற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை தலையில் தடவினால் போதும். 

மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version