இந்த நாட்டில் ஜே . ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் அநுரகுமார
திசாநாயக்க காலம் வரையிலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை
செய்துவருகின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
தெரிவித்துள்ளார்.
இந்த 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக்கண்டாலும் தீர்வு எதுவும் இல்லாத நிலையே காணப்படுகிறது
கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
படுகொலைகள்
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“1987ஆம் ஆண்டு இதே தினத்தில் 33ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால்
வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு,முதலைக்குடா இறால் வளர்ப்ப
பண்ணை,படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில்
157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.
அதனைவிட கணக்கெடுக்கமுடியாத
வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாரிய இனப்படுகொலையொன்று
முன்னெடுக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு என்பது கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில்
பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.
இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள்
அதன்பின்னர் இந்திய – இலங்கை
ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் படுகொலைகள் முள்ளிவாய்க்கால்
வரையில் இடம்பெற்றது.
கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய
தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இன்று 38வது ஆண்டினை நினைவுகூரும்போது கூட
படுகொலைசெய்தவர்கள் மீதோ அதன் பின்னாளிருந்தவர்கள் மீதோ எந்தவித விசாரணைகளும்
முன்னெடுக்கப்படவில்லை’’ என்றார்.
