பெண்கள் அனைவருக்கும் தங்களின் முடி அழகாகவும், அடர்த்தியாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற பலவிதமான பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகும் முடி வளரவில்லை என்று பெண்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், மாட்கெட்களில் கிடைக்கும் இரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல் உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் நல்ல அடர்த்தியாகவும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பராமரிப்புப் பொருட்கள்
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- வெந்தய விதைகள் – 2 டீஸ்பூன்
- தயிர் – 1/2 கப்
செய்யும் முறை
- முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
- அடுத்த நாள் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தய விதைகளை புதிய கறிவேப்பிலையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
- வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை விழுதுடன் தயிர் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட்ஐ தயாரிக்க வேண்டும்.
- இப்போது இந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்
- உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
- உங்கள் தலைமுடியில் ஹேர் மாஸ்க்கை ஒரு மணி நேரம் விடவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை நன்கு அலசவும்.
- தேவைப்பட்டால் ஷாம்புவும் போட்டு அலச வேண்டும்.