Home இலங்கை கல்வி யாழில் க.பொ.த சாதாரண பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

யாழில் க.பொ.த சாதாரண பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்று ஏ
சித்திகளை பெற்றுக்கொண்ட, சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் மாணவர்கள்
இன்றையதினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை
பெற்ற மாணவர்கள் இன்றையதினம்(21) இவ்வாறு கல்லூரியில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு கௌரவிப்பு

இதன்போது மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் முதல்வர்  சுலபாமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
அதிதிகளாக கல்லூரியின் முன்னாள் அதிபர்  அ.வேலுப்பிள்ளை முன்னாள்
ஆசிரியர் பூசலட்சுமி பொன்னுத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள்
அதிபர்கள்/ஆசிரியர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version