Home இலங்கை சமூகம் இன்று முதல் ஆரம்பமாகும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளைகள்!

இன்று முதல் ஆரம்பமாகும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளைகள்!

0

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் – சிங்கள புத்தாண்டை மங்களகரமான சடங்குகளுடன் வரவேற்க நாடு முழுவதும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டிற்கான சுபவேளைகள் கணிக்கப்பட்டுள்ளன.

சுபகாலம்

இன்று (13) இரவு 8:57 மணிக்கு சுபகாலம் தொடங்கி நாளை(14) காலை 9:45 மணிக்கு முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று அதிகாலை 3:21 மணிக்கு மங்களகரமான புத்தாண்டு பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6:44 மணிக்கு வேலை, வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கும் உணவு உண்பதற்கும் உகந்த நேரம் என்று கூறப்பட்டுள்ளது.

மங்கள சடங்குகள்

புத்தாண்டிற்கான சமையல் சுபநிகழ்ச்சிகளை நாளையத்தினம்(14) அதிகாலை 4.04 மணிக்கு ஆரம்பிக்கலாம் என கூறப்படுகின்றது.

அதன்படி, இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, தெற்கு திசையை நோக்கியபடி, அடுப்பை பற்றவைத்து, பால் சாதம், இனிப்பு வகைகளை தயாரிக்கலாம்.

புத்தாண்டு காலத்தில், வெண்ணிற ஆடை உடுத்தி தெற்கு திசை நோக்கி பார்ப்பது பொருத்தமானது என்பதை மங்கள சடங்குகள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தடவி, பச்சை வஸ்திரம் உடுத்தி வடக்கு திசை பார்த்து, நீராடுவது உகந்தது என்பது ஐதீகம்.

NO COMMENTS

Exit mobile version