Home இலங்கை சமூகம் நேபாள பெண்ணின் முறைப்பாடு! சிக்கிய ஹோட்டல் ஊழியர்

நேபாள பெண்ணின் முறைப்பாடு! சிக்கிய ஹோட்டல் ஊழியர்

0

ஹோட்டல் அறையில் இருந்து 950 அமெரிக்க டொலர்கள் மற்றும் ரூ.10,000 பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியர் ஒருவரை சிகிரியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிகிரியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் 21 வயது ஹோட்டல் ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாள பெண்ணின் முறைப்பாடு 

42 வயது நேபாள பெண் ஒருவர் சிகிரியா காவல்துறையில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தில் திருடப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.295,000/= என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version