Home இலங்கை சமூகம் யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு: பொலிஸார் அவசர கோரிக்கை

யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு: பொலிஸார் அவசர கோரிக்கை

0

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் திருட்டு
சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(29.08.2024) யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடு புகுந்து பெருமளவு
பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி குறித்த சந்தேகநபர் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடும் காட்சிகள்  அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.

காணொளி பதிவு

கண்காணிப்பு கருவியின் காணொளியில் நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும்
வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையை
மாற்றிச் செல்வதும் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.

குறித்த காணொளியில் பதிவாகிய நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக
0718591337
என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறும்
சாவகச்சேரி பொலிஸார் மக்களிடம் அவசர
கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/house-break-in-and-theft-in-broad-daylight-jaffna-1725013411

NO COMMENTS

Exit mobile version