Home இலங்கை சமூகம் தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றாக சேதம்

தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றாக சேதம்

0

Courtesy: H A Roshan

திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று (04.09.2024) இடம்பெற்றுள்ளது.

 குறித்த வீட்டில் வாடகைக்காக சிலர் வசித்து வந்த நிலையில் பல இலட்சக் கணக்கு பெறுமதியான உபகரணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீச் சம்பவம்

மின் ஒழுக்கில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தீச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் வாடகை வீட்டில் இருந்த நபர்களின் உபகரணங்களே தீப்பற்றி நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு மீரா நகர் கிராம சேவையாளர் சென்று களநிலவரங்களை வருகைத்தந்து ஆராய்ந்ததோடு இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் எதுவுமில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/house-was-completely-destroyed-by-fire-1725456880

NO COMMENTS

Exit mobile version