Home இலங்கை பொருளாதாரம் மோசமடையும் உலக நாடுகளின் நிலை! ஆபத்தில் இலங்கையின் எதிர்காலம்

மோசமடையும் உலக நாடுகளின் நிலை! ஆபத்தில் இலங்கையின் எதிர்காலம்

0

இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் சர்வதேச நாடுகளின் அதிகாரப் போட்டிக்குள் சிக்கியிருப்பதாக பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார பின்னடைவு தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், உலக நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள் இலங்கை பொருளாதாரத்தை பாதிக்கக் கூடும்.

உக்ரைன் – ரஷ்ய மோதலால் உலகம் முழுவதும் கோதுமையின் விலை வெகுவாக அதிகரித்தது. அதேபோன்று, மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தால் எரிபொருள் விலை அதிகரித்தது.

குறித்த காரணிகள் இலங்கை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத காரணிகளாக உள்ளன.

எனினும், இந்தோனேசியா, உகண்டா மற்றும் ஆர்ஜன்டினா போன்ற நாடுகளை போல இலங்கையின் பணவீக்கம் 400 வீதம் 500 வீதமாக அதிகரிப்பதற்கு எந்த காலத்திலும் வாய்ப்பில்லை.  

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version