ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு முடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில எண்ணெய்கள் தயாரித்து பயன்படுத்தலாம்.
எவ்வித செயற்கை முறையும் இல்லாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோஸ்மேரி எண்ணெய்- 15 சொட்டு
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- தேன்-1 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்க்க நன்றாக கலக்கவும்.
- பின் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
- இறுதியாக கலவையில் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்க்கவும். இந்த எண்ணெய் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்துகொள்ளவும்.
- இதன் பின் 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு கழுவ வேண்டும்.
- ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது.