Home ஏனையவை வாழ்க்கைமுறை டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்

டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்

0

அனர்த்தங்களுக்கு எதிர்வினையாற்றும் நிலையிலிருந்து உயிர்களைக் காக்கும் முன்கூட்டிய பொதுச் சுகாதார நடவடிக்கைக்கு சமூகத்தை பழக்கப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் இன்று (11) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 மாவட்டங்களை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு

இந்தத் திட்டமானது, டெங்கு ஒழிப்பை மையமாகக் கொண்ட உலகளாவிய முதலாவது ஆரம்ப செயல்திட்டமாகும்.

அனர்த்தங்களுக்கு எதிர்வினையாற்றும் நிலையிலிருந்து உயிர்களைக் காக்கும் முன்கூட்டிய பொதுச் சுகாதார நடவடிக்கைக்கு சமூகத்தை பழக்கப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார சவாலாக உள்ளது.

நாட்டில் பருவகால மழை மற்றும் அண்மையில் பதிவான `தித்வா’ சூறாவளி போன்ற வானிலை மாற்றங்களின் போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாவதை காணமுடிகிறது.

அவ்வாறன மழைக்காலங்களின் பின்னர் நுளம்புகள் பெருகி, பாரிய நோய் தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.

ஆகையால் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னரே உரிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உயிர்களைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் பாதிப்பைக் குறைத்து அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

தற்போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வருட புதிய திட்டம் 2025 ஜூலை முதல் 2027 ஜுன் மாதம் வரை செயற்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய ஐந்து மாவட்டங்களை பிரதானக் கேந்திர நிலையங்களாகக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள், பாடசாலைகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயற்பாட்டு ரீதியான தெளிவூட்டல் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன. 

NO COMMENTS

Exit mobile version