மஞ்சள், முகப்பரு பாதிப்பு மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் சிறப்பாக செயல்படுகிறது.
முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கவும், முகப்பருவை ஆற்றவும் இதைப் பயன்படுத்தலாம்.
மஞ்சளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான அழகு குறிப்புகள் இங்கே உள்ளன. தொடர்ந்து படியுங்கள்.
அன்றாடம் மேக்கப் செய்யும் போது ஃபவுண்டேஷனைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் இயற்கையான தோல் நிறத்திற்கு நெருக்கமான ஷேட் வருவதில்லை என்று எப்போதும் புகார் கூறுகின்றனர்.
மஞ்சள் தூள்
மஞ்சளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையை எளிதாகச் சரி செய்யலாம் சிறிது ஃபவுண்டேஷன் எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அவற்றை நன்கு கலந்து, ஷேட்-ஐ சரிபார்க்க கையின் பின்புறத்தில் தடவவும்.
இப்போது அதை முகத்தில் தடவவும்; இது உங்களுக்கு இயற்கையான பிரகாசத்தை தரும்.
உங்கள் பிபி க்ரீமில் கூட இந்த ஹேக்கை பயன்படுத்தலாம்.
மஞ்சள், முகப்பரு பாதிப்பு மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் சிறப்பாக செயல்படுகிறது.
கற்றாழை ஜெல்
முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கவும், முகப்பருவை ஆற்றவும் இதைப் பயன்படுத்தலாம்.
அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியை எடுத்து, அதனுடன் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும். உடனடி நிவாரணம் பெற இந்த பேஸ்டை, பாதித்த இடத்தில் தடவவும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமத்தை பெறலாம்.
மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உதடு வெடிப்புகளை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம்.
மஞ்சளுடன் ஒரு சிட்டிகை பெட்ரோலியம் ஜெல்லி கலந்து, உங்கள் உதடுகளின் வறண்ட சருமத்தை எக்ஃபாலியேட் செய்யவும்.
ஒரு துணியால் அதை துடைத்து, பின்னர் ஒரு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள்.