மன்னாரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (17.09.2024) இந்தப் பிரசாரக் கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.
பெருமளவிலான ஆதரவாளர்கள்
மேலும், இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.திலிபன், முசராப், முன்னாள் ஆளுநர் அசாத்சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Source: https://tamilwin.com/article/huge-election-campaign-rally-in-support-of-ranil-1726607102
