சுமார் எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் வசிக்கும் 45 மற்றும் 47 வயதுடைய வர்த்தகப் பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது பயணப் பையில் இருந்த 12 தங்க வளையல்கள், தங்க நெக்லஸ், 02 வளையல்கள், 01 தங்கப் பெண்டன்கள், 02 தங்க மோதிரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இரண்டு வர்த்தகர்கள்
மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வரி செலுத்தாமல் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 06 மடிக்கணினிகள் மற்றும் 114 ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளை எடுத்துச் சென்ற இரண்டு பயணிகள் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு-10 மருதானை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயது மற்றும் 38 வயதுடைய வர்த்தகர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 05.30 மணியளவில் இருவரும் டுபாயில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் விசாரணையின் போது சிக்கியுள்ளனர்.