ஏ-9 வீதியில் யாழ். எழுதுமட்டுவாளுக்கும் – முகாமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய
பள்ளங்கள் காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக
தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
அதேவேளை குறித்த பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த பாரிய பள்ளங்களை
நிரவி சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை சமூக செயற்பாட்டாளர்களால் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
