Home இலங்கை சமூகம் செம்மணியில் புத்தகப் பையுடன் மீட்ட எலும்புக்கூடு – உண்மைகள் வெளிவரும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணியில் புத்தகப் பையுடன் மீட்ட எலும்புக்கூடு – உண்மைகள் வெளிவரும் – நீதி அமைச்சர் உறுதி

0

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதிமன்றங்களில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என நிதியமைச்சர் உறுதியளித்தார்.

அதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

இந்த விடயத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version