Home இலங்கை சமூகம் தோண்ட தோண்ட பிணக்குவியல்-புதைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட உடல்கள்: அம்பலமாகும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

தோண்ட தோண்ட பிணக்குவியல்-புதைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட உடல்கள்: அம்பலமாகும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

0

அண்மையக்காலமாக சமூக வலைதளங்களில் வலிகளால் நிறைந்து உச்ச கட்ட ஆதங்கங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விடயம்தான் யாழில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்த பதிவுகள் மற்றும் செய்திகள்.

யாழ்ப்பாணம், அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அண்மையில் அடையாளம் காணப்பட்டது.

இந்த விடயம் காட்டுதீயாய் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் உள்நாடு உட்பட சர்வதேச அளவில் இது பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.

காரணம், நாட்டில் இனப்படுகொலை என்ற ஒன்று இடம்பெறவில்லை என காலம் காலமாய் தெரிவித்து வந்த அரசுக்கு இவ்வாறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பாரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்தநிலையில், இதுவரையில் செம்மணியில் 628 தமிழ் மக்கள் வரையில் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை முதலில் கண்ட நபர் வைத்தியலிங்கம் கிருபாகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குழந்தையில் இருந்து வயது வந்த பெண்கள் வரை ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கொன்று குவிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த விவகாரத்தின் உண்மையான பிண்ணனி, அரசின் தலையீடு, தமிழ் மக்கள் அனுபவித்த வலி மற்றும் வேதனை என அவர் தெரிவித்த பரலதரப்பட்ட அதிர்ச்சியூட்டும் விடங்களுடன் வருகின்றது இந்த நேரடி நேர்காணல்,

     

https://www.youtube.com/embed/iEWSd5f1LSQ?start=2

NO COMMENTS

Exit mobile version