வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொதிகள் யாழ்ப்பாண
சிறைச்சாலையால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிவாரண பொதிகள் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன்
இந்திரகுமாரால் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களின் நன்கொடை
மற்றும் சிறைக்கைதிகளின் மதிய உணவினை தவிர்த்து இந்த நிவாரணம்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
