கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும்
வெள்ள பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக
மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையிலே கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்திற்கான கால்நடைகள்
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் தற்போதைய மேய்ச்சல்
தரவையின்மை மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றால் தங்களுடைய கால்நடை வளம்
அழிந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
தங்களது வாழ்வாரமாகவுள்ள கால்நடைகளை பாதுகாக்க முடியாதிருப்பதாகவும்
கால்நடை பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த நிலையில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள கால்நடைகள் பலவும்
நோய்வாய்ப்பட்டு காணப்படுகின்றன.
இதனால் மாவட்டத்தின் பால் உற்பத்தி
பாதிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடைகளும் அழியும் அபாய நிலை காணப்படுவதாகவும்
பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.