Home இலங்கை சமூகம் குரங்குகளுக்கு கருத்தடை – அநுர அரசின் அடுத்த திட்டம்

குரங்குகளுக்கு கருத்தடை – அநுர அரசின் அடுத்த திட்டம்

0

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த முன்னோடித் திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க (Gamagedara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மாத்தளை (Matale) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை வைத்தியர்களின் உதவிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முன்னோடித் திட்டத்திற்காக விவசாய அமைச்சினால் 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குரங்குகளை கருத்தடை செய்வதற்கு கால்நடை வைத்தியர்களின் உதவிகள் எடுக்கப்படும்.

மேலும், இந்த முன்னோடித் திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version