சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தமது தாய் நாடு இலங்கை எனவும் இந்த நாட்டை விட்டு வேறும் ஓர் நாட்டில் குடியேறும் எந்தவொரு திட்டமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வேறும் நாடொன்றில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் நாடொன்றில் நிரந்தரமாக வதியவோ தாம் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம்
சில தரப்பினர் தங்களது விருப்பு வெறுப்புகளுக்காக இவ்வாறு பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து வருவதாக அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது கடவுச்சீட்டு நீதிமன்றின் பொறுப்பில் உள்ளதாகவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
