Home சினிமா பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் உடல்நலக் குறைவால் காலமானார்..

பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் உடல்நலக் குறைவால் காலமானார்..

0

மனோஜ்குமார்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ்குமார்.

தேசப்பற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் பாரத்குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
புரப் அவுர் பஸ்சிம் என்ற திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மனோஜ்குமார் உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 21ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் இன்று அதிகாலை 4.03 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இவரது மறைவிற்கு பிரதமர் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version