Home சினிமா அதுபோன்ற கதாபாத்திரங்களில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன்.. சித்தார்த் ஓபன் டாக்

அதுபோன்ற கதாபாத்திரங்களில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன்.. சித்தார்த் ஓபன் டாக்

0

சித்தார்த்

நடிகர் சித்தார்த், உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பின் ஆயுத எழுத்து நடித்தார்.

ஆனால் தமிழில் அவருக்கு மார்க்கெட் ஒழுங்காக இல்லாததால் தெலுங்கி பக்கம் செல்ல அவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. பின் ஹிந்தியில் பக்கம் சென்றவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் 180 படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

விஷால் கூட திருமணமா, அவரை நான் காதலிக்கிறேன்… நடிகை அபிநயா ஓபன் டாக்

சமீபத்தில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவை மறுமணம் செய்து கொண்டார்.

நடிகரின் பேட்டி

அண்மையில் நடிகர் சித்தார்த் தனது சினிமா பயணம் குறித்து ஒன்று பேசியுள்ளார். அதில் அவர், பெண்களை அடிப்பது, ஒரு பெண்ணின் இடையை கிள்ளுவது, ஒரு பெண்ணை கட்டுப்படுத்துவது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் என்னை தேடி வந்தன.

ஆனால் அதையெல்லாம் ஏற்று நடிக்க மறுத்துவிட்டேன். அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்றிருந்தால் நானும் எப்போதோ பெரிய ஸ்டாராகி இருப்பேன், ஆனால் நான் எனது மனதுக்கு பிடித்ததை மட்டுமே செய்பவன்.

பெண்களுக்கு நான் மரியாதை கொடுப்பவன் என்றார்.  

NO COMMENTS

Exit mobile version