டித்வா புயல் நிலைமையால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலம் நிவாரணத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலம் வெள்ள நிவாரணப் பணி இன்யைற தினம் (22.12.2025) ஊவா மாகாணத்தின் பதுளை, களன் தோட்டம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டன.
நிதி பங்களிப்பு
உலகளாவிய ரீதியில் வியாபித்து இருக்கக்கூடிய ஐ.பி.சி தமிழ் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் இந்த வெள்ள நிவாரண உறவுப் பாலம் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலத்தின் மலையகத்துக்கான பயணம் என்ற ரீதியில் பொது மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஏராளமான மக்கள், புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்கியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டு மக்களிடம் உதவிகள் கோரப்பட்டிருந்த நிலையில் ஏராளமான மக்கள் இதில் பங்கேற்று பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கையளித்தும் உதவியிருந்தனர்.
அதற்கமைய, ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் இவ்வாறு மக்களால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்களுடன் இன்றைய தினம் (22.12.2025) மலையக சொந்தங்களை சென்றடைந்தது.
