Home இலங்கை சமூகம் போகச் சொன்னால் போய்தானே ஆகவேண்டும்..! ருக்‌ஷன் பெல்லன கருத்து

போகச் சொன்னால் போய்தானே ஆகவேண்டும்..! ருக்‌ஷன் பெல்லன கருத்து

0

போகச் சொன்னால் போய்தானே ஆகவேண்டும். நான் யாசகம் பெற்றேனும் பிழைப்பேன் என பதவி
நீக்கப்பட்ட வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து
இடைநீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, தனது அலுவலகத்தில் இருந்து
இன்று(19.12.2025) வெளியேறினார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க

அலுவலகத்தில் இருந்த தனது முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு வீடு செல்லும் வழியில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளை
எழுப்பிய நிலையில் அவற்றுக்குச் சிரித்தப்படியே பதிலளித்துள்ளார்.

வைத்தியர்
ருக்‌ஷன் பெல்லன.

அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், வழங்கப்பட்ட
பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இன்று விடைபெறுகின்றீர்களா?

பதில்:- போகச் சொன்னால், போய்தானே ஆகவேண்டும்.

கேள்வி:- இவ்வாறு செல்வது கவலை இல்லையா?

பதில்:- எதற்காக கவலைப்பட வேண்டும்? நான் வைத்தியர், தனியார் துறையிலும்
தொழில் செய்ய முடியும்தானே?

கேள்வி:- வேலை தேடிக்கொள்ள முடியுமா?

பதில்:- அது இலகுவான விடயம்.

கேள்வி:- வைத்தியரே, தற்போது தொழிலும் இல்லை, என்ன செய்ய போகின்றீர்கள்?

பதில்:- நான் யாசகம் பெற்றேனும் பிழைப்பேன் (சிரிக்கின்றார்…)
செல்வந்தர்களும் யாசகம் பெற்று வாழும் நிலை காணப்படுகின்றது.

ஐயோ, என்னிடம் காரை மறித்துக் கேள்வி கேட்க வேண்டாம். பிறகு இதற்கு எதிராகவும்
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்  இவ்வாறு பதிலளித்துவிட்டு வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன காரில் வீடு நோக்கிப் புறப்பட்டார்.

NO COMMENTS

Exit mobile version