Home இலங்கை சமூகம் இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும்..! நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கம்

இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும்..! நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கம்

0

28 ஆண்டுகள் நீதிபதியாக எனது கடமை உருண்டோடியது. 96 ஆம் ஆண்டு யாழ்.மண்ணில் அரங்கேறிய சூரிய கதிர் நடவடிக்கையின் போது செம்மணி புதைகுழி, கிரிஷாந்தி என புதைகுழிகள் தோண்டுமாறு அழைக்கப்பட்ட நிலையில்,  எட்டு நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்ய மறுத்த போது ஒன்பதாவது நீதிபதியாக களத்தில் இறங்கியவன் நான் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குமார் பொன்னம்பலத்தை சந்தித்தேன். ஆபத்தான வழக்கு, உயிருக்கு அச்சுறுத்தலான வழக்கு, அச்சமின்றி தீர்ப்பு வழங்குவாயா என கேட்டார். நான் சொன்னேன் என் முன் என்ன நடக்கின்றதோ, அந்த நிமிடம் வருவது எனது உத்தரவு. அதற்காக யாரிடமும் ஆலோசனையும் பெறமாட்டேன். எனக்கு எது சரியோ அதை செய்வேன் என்றேன்.

அவர் உடனடியாக புறப்படுமாறு கூறினார். மற்றைய நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல்கள் என கூறப்பட்டது. எனக்கும் அச்சுறுத்தல் வரும் என அரசு நம்பியது அதனால் என்னை பாதுகாப்பாக வைத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் எம் மண்ணும் பெண்ணும் சீரழிக்கப்பட்டபோது நீதி வழங்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version