தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களை பதவி விலக சொல்வது கேலிக்கூத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவு திட்ட உரையில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
யாழ். மாவட்ட முன்னேற்றம்
அமைச்சர்களை பதவி விலக கூறும் குறித்த நபருக்கு முதுகெலும்பு இருந்தால் உங்கள் பிள்ளைகளின் இருப்பிடம் பற்றி தெரிவிக்கமுடியுமா?
அது தொடர்பிலான துணிச்சல் அவருக்கு இருக்கின்றதா? மேலும் நாடாளுமன்றில் கமராக்களுக்கு முன்னால் வீர வசனம் பேசுபவரும் இருக்கின்றார்.
”மம நம” என கூறியதற்காக விமர்சிக்கின்றார். ஆனால் அவரால் தமிழில் ஒரு முகநூல் பதிவை தமிழில் சரியாக வெளியிடமுடியவில்லை.
ஆனால் தமிழர்களை கொன்று அழித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து செயற்பகின்றார்கள்.
இவை ஒன்றும் மக்களுக்கானதில்லை. அவரது கதையால் ஒருபோதும் யாழ். மாவட்டம் முன்னேறாது.
இனவாத வலை
இனவாத வலையேற்பட்டபோது, எதிர் தரப்பில் இருந்த தமிழ் மற்றம் சிங்கள எம்.பிக்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.
இவர்களால் இனவாத அரசியலையே முன்னெடுக்க முடியும்.
இனவாதத்தால் பாதிக்கப்படபோவது இங்குள்ள எம்.பிக்களின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் தென்பகுதியில் கல்வி கற்று வேறு வேறு நாடுகளில் உள்ளனர்.
ஆனால் பாதிக்கப்படபோவது தமிழர் பகுதியில் வாழும் எதிர்கால சந்ததியினரே.” என்றார்.
இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி,
“சபாநாயகரே இவர் என்று வலுசக்தி அமைச்சு தொடர்பில் கதைத்த விடயங்கள் என்ன? எதுவும் இல்லை. நிலையியல் கட்டலையின் படி நேற்று பிரேரணைக்கு முரணாக கதைத்ததற்காக எனது நேரத்தை இல்லாது செய்தீர்கள். ஆனால் இன்று அவ்வாறு நடக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
https://www.youtube.com/embed/i5UJf-LATiA
