Home சினிமா ரஜினிக்கு கூலி படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. ரசிகர்கள் ஷாக்

ரஜினிக்கு கூலி படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. ரசிகர்கள் ஷாக்

0

கூலி திரைப்படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

செக் வைத்த இளையராஜா

இந்த நிலையில் கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.

கூலி படத்தின் டைட்டில் டீசரில் இடம்பெற்ற ‘வா வா பாக்கம் வா’ பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும், அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதாம். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source: https://cineulagam.com/article/ilayaraja-notice-to-sun-pictures-for-coolie-movie-1714535041

NO COMMENTS

Exit mobile version