Home இலங்கை சமூகம் யாழில் வலிப்பு ஏற்பட்ட ஆணுக்கு நேர்ந்த கதி

யாழில் வலிப்பு ஏற்பட்ட ஆணுக்கு நேர்ந்த கதி

0

யாழில் (Jaffna) வலிப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொல்லாலை வீதி,
இளவாலையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் (வயது 67) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில், குறித்த நபர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்த விடயம்

இவ்வாறான
சூழ்நிலையில் வலிப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்
இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோதே அவர் உயிரிழந்த விடயம்
தெரியவந்துள்ளது.

மரண விசாரணை

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

சாட்சிகளை இளவாலை காவல்துறையினர் நெறிப்படுத்திய நிலையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version