Home இலங்கை குற்றம் கிராம உத்தியோகத்தர்களால் முறியடிக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களால் முறியடிக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை

0

Courtesy: Satheesh Batticaloa

மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை
கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் கிராம உத்தியோகத்தர்கள்
இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் மூன்று கொள்கலன் சட்டவிரோத கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று
(12.12.2024) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

03 கொள்கலன்கள் கைப்பற்றல்

கிராம மக்கள் மூலம் தாந்தாமலையை அண்டிய கிராமப் பிரிவுகளில் கடமையாற்றும்
கிராம உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக,
காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 12000 மில்லி லீட்டர் அடங்கிய
சட்டவிரோத கசிப்பு 03 கொள்கலன்களில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையினை கிராம உத்தியோகத்தர்கள் மிகவும் துணிச்சலான முறையில்
முன்னெடுத்துள்ளனர்.

1963ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதிய வர்த்தமானிக்கு வெளியீட்டுக்கு அமைவாக,
மதுவரி கட்டளைச் சட்டம் 33,35 மற்றும் 48 அ பிரிவின் சட்டத்தின் படி கிராம
உத்தியோகத்தர்களால் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக இந்நடவடிக்கையில் ஈடுபட்ட
கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது, சந்தேக நபர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிச்
சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கசிப்பு யாவும் அவ்விடத்தில்
அழிக்கப்பட்டதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version