Home இலங்கை சமூகம் சட்டவிரோத கடற்றொழில் :ஆதரவாக செயற்படும் சிறிலங்கா கடற்படை

சட்டவிரோத கடற்றொழில் :ஆதரவாக செயற்படும் சிறிலங்கா கடற்படை

0

யாழ்ப்பாணம்(Jaffna) – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்தொழிலில் ஈடுபட்ட 16 பேர் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டைக்காட்டில் இருந்து நேற்று ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை குறித்த படகுகள் இன்று (12) காலை வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரை கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காணாமற்போன் கடற்றொழிலாளர்கள் : வெளியான தகவல்

சட்டவிரோத தொழில்

விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக இன்றும் சட்டவிரோத கடற்தொழிலுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்து இலஞ்சம் கொடுத்து தொழில் புரிவதாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்களை காங்கேசன்துறையில் இருந்து வரும் டோரா படகுகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்திலேயே பல உண்மைகள் வெளிவந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

நடிகையின் அநாகரிக செயல் :ஹோட்டலில் சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

மஹியங்கனை கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version