ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமான முறையில் ரகசியமாக நடத்தப்பட்டு வந்த எரிபொருள் கிடங்கை சுற்றி வளைத்த காவல்துறையினர் அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (18) பிற்பகல் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ரகாபொல, மாஹேன பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த சட்டவிரோத எரிபொருள் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொலங்கமுவ, தெல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் எனறும் இவரிடமிருந்து 790 லீற்றர் டீசலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் வரகாபொல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
