Home இலங்கை சமூகம் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலைப்பாம்புகள் சிக்கின

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலைப்பாம்புகள் சிக்கின

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை (Wattala) காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இன்று (21.08.2024) மலைப்பாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனையின் போது இலங்கைக்கு சொந்தமான முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை

வத்தளை பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையமொன்றின் மாடியில்
குறித்த விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இருவரையும் வத்தளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விலங்குகள் 300,000 ரூபாய்க்கும் அதிக தொகைக்கு விற்பனைக்கு தயாராக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விலங்குகளை தெஹிவளை (Dehiwala) மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி அவை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்னர்.

NO COMMENTS

Exit mobile version