Home இலங்கை குற்றம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட தேக்க மரப்பலகைகளுடன் சந்தேக நபர் கைது

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட தேக்க மரப்பலகைகளுடன் சந்தேக நபர் கைது

0

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட
தேக்க மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை
மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

அத்துடன் குறித்த தேக்க மரப்பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய
வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் சம்மாந்துறை 03 பகுதியைச்
சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version