Home இலங்கை சமூகம் அழியப்போகும் தீவு: இரகசிய திட்டமிடல்களை எதிர்க்கும் மக்கள்

அழியப்போகும் தீவு: இரகசிய திட்டமிடல்களை எதிர்க்கும் மக்கள்

0

மன்னாரில் (Mannar) இல்மனைட் கனிம மணல் சுரண்டலுக்கு எதிராக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டமானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த குறித்த விழிப்புணர்வு போராட்டம் கடந்த புதன்கிழமை (06) ஆரம்பமானது.

இது தொடர்பில் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் மற்றும் அதிகாரிகளை தாண்டி எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை எங்களது மக்களை விழிப்புணர்வடைய செய்வதுதான்.

தொடர் பேராட்டங்களை முன்னெடுக்கும் மக்கள் போராட்டங்களை கைவிடும் போது அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமாகின்றது ஆகவே மக்கள் போராட்டத்தை கைவிட கூடாது என்பதை நினைவூட்ட நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளளோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போராட்டத்தின் பிண்ணனி, போராட்டக்காரர்களின் குறிக்கோள் மற்றும் அரசாஙகத்திடம் இருந்து பேராட்டக்காரர்கள் எதிர்ப்பார்க்கும் விடயம் என்பவை தொடர்பில் அவர்கள் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய மக்கள் கருத்து நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/C6pfCV8K6VQ

NO COMMENTS

Exit mobile version