Home முக்கியச் செய்திகள் நாட்டை மீட்க களமிறங்கிய IMF: இலங்கைக்கு அவசர நிதி ஒதுக்கீடு

நாட்டை மீட்க களமிறங்கிய IMF: இலங்கைக்கு அவசர நிதி ஒதுக்கீடு

0

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

பேரழிவை ஏற்படுத்திய டித்வா புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

புனரமைப்புப் பணி

புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டம் எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை ஆராய்வதற்கும் மேலதிக காலம் தேவைப்படுகின்றது.

இதன் காரணமாக, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version