Home இலங்கை சமூகம் அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாட்டை பாராட்டிய ஐ.எம்.எப்

அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாட்டை பாராட்டிய ஐ.எம்.எப்

0

அரசாங்கத்தின் பொருளாதார உறுதிப்பாடு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஆராய்வதற்கான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையில் இன்று (21) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தான இணைந்து கொண்டதாகவும், இலங்கையில் தற்போது உருவாகியுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை நான் சுட்டிக்காட்டியதாகவும் சிறிலங்கா அதிபர் அநுரகுமார திசாநாயக்க,தெரிவித்துள்ளார்.

அந்த வலுவான அடித்தளத்தின் மீது, பொருளாதார முன்னேற்றத்தை அடைவதன் மூலமும், புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் இலங்கையை சர்வதேச அளவில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டத்தை விரைவுபடுத்துவதாக திட்டமிட்டுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதோடு, இலங்கையை உலகளவில் முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான ஆதரவை வழங்க உடன்பாடு தெரிவித்ததாகவும் சிறிலங்கா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

you may like this

https://www.youtube.com/embed/je6axRov2H8

NO COMMENTS

Exit mobile version