Home இலங்கை சமூகம் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது : வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணம் குறைக்கப்படாது : வெளியான அறிவிப்பு

0

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலை குறைக்கப்படாததால் இவ்வாறு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக பணம்

தற்போதைய சூழ்நிலையில் பேருந்துகளை இயக்குவதற்கான செலவு மிக அதிகமாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்துகளை பராமரிக்க உதிரி பாகங்கள் மற்றும் டயர்களுக்கு அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தின் போது காலவரையறையின்றி பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version