Home இலங்கை சமூகம் ஆபத்தான நிலையில் இலங்கை தொடருந்து சேவைகள்! மக்களுக்கு ஏற்படவுள்ள சிரமம்

ஆபத்தான நிலையில் இலங்கை தொடருந்து சேவைகள்! மக்களுக்கு ஏற்படவுள்ள சிரமம்

0

மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

காரணம்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்து பண்டாரவளை மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாகவே மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதத்தில் மலையகம் மற்றும் கடலோர தொடருந்து பாதைகளில் மொத்தம் பதினொரு தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்துகள் தடம்புரள்வு

தொடருந்து தண்டவாளங்கள், தொடருந்து என்ஜின்கள், பெட்டிகள் மற்றும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்ட பராமரிப்பு பிழைகள் காரணமாகவே தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்படி, பெரும்பாலான தொடருந்துகள் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையக பாதையில் தண்டவாளங்களின் மோசமான பராமரிப்பு காரணமாக சில தொடருந்துகள் தடம் புரண்டுள்ளன.

இப்பகுதியின் புவியியல் சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தொடருந்து பாதைகள் பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version