Courtesy: Sivaa Mayuri
இந்திய (India) ஏகபோகத்தின் கீழ் 47 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இலங்கையின் சுகாதார அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை சுகாதார சேவைக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஸ் வலியுறுத்தியுள்ளார்.
பதிவு செய்யப்படாத மருந்துகள்
மேலும், இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் மருந்துகளின் தரம் மீண்டும் கேள்விக்குள்ளாகும் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்தியாவில் சுகாதாரத்துக்கு கேடு என்ற அடிப்படையில் 156 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.