Home இலங்கை சமூகம் அவசர நிலைமை – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அவசர நிலைமை – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களில் மருத்துவ வசதிகள் பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், தற்காலிக பாதுகாப்பு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி கிளினிக்குகளில் மருந்துகளைப் பெறுபவர்களுக்கு, அவற்றை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தெதுரு ஓயா நீர்மட்டம் அதிகரிப்பு

தெதுரு ஓயா நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தேவையெனில் அங்கு உள்ள நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பிரதான வைத்தியசாலையிலும் அனர்த்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவசர நிலைமைகளை சமாளிக்க முழுமையான தயார்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அனர்த்த நிலைமையில் மக்கள் மற்றும் நோயாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், அனைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version