Home இலங்கை சமூகம் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2,100 ஆசிரியர் நியமனங்கள்

அதன்படி இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2,100 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல உயர் டிப்ளோமா பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/important-announcement-education-department-1718287361

NO COMMENTS

Exit mobile version