Home இலங்கை பொருளாதாரம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு

0

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் பிரைவட் லிமிடெட் [Litro Terminals (Private) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் அடுத்தகட்ட நகர்வுக்காக தற்போது 8 முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முதலீட்டாளர்கள் அனைவரும் முழுமையான மதிப்பீட்டின் பின்னரே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை குழுக்கள்

இந்நிலையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சிறப்பு திட்டம் மற்றும் சிறப்பு பேச்சுவார்த்தைக் குழுக்கள் முன்மொழிவு கோரிக்கைகளுடன் இந்த திட்டத்தை தொடரவுள்ளன.

Source: https://tamilwin.com/article/important-desion-taken-by-govt-on-litro-gas-1720435134

NO COMMENTS

Exit mobile version